இராமன்

10:36 PM Posted In Edit This 0 Comments »¿£ À¢Èó¾ ¸Ä¢Ô¸ò¾¢ø

þáÁý À¢Èó¾¢Õó¾¡ø                               

þáÁý þáŽý 

¬¸¢Â¢ÕôÀ¡ý - ¿¡ý  

þáÁý ¬¸¢Â¢Õô§Àý.....

                                                                                                                 

பாரதியின் “பராசக்தியிலிருந்து” ஒரு பகுதி.

7:58 AM Posted In Edit This 0 Comments »வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெலாம் நான்
காற்றுப் புனலும் கடலுமே நான்.

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்
வாரியி னுள்ளே உயிரெலாம் நான்.

கம்பனி சைத்த கவியெலாம் நான்
காருநர் தீட்டும் உருவெலாம் நான்
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்.

இன்னிசை மாத ரிசையுளேன் நான்
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொயையிருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரக் கோடி இயக்குவோன் நான்
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினான் நான்
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்
கண்டபல சக்திக் கணமெலாம் நான்
காரண மாகிக்க கதித்துனோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருட்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதியே நான்.


இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாய்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர்நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக்குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால்வையகம்
பேதமை யற்றிடுங் காணீர்.

(
பாரதியின் முரசுப் பாடலிலிருந்து ஒரு சிறு பகுதி)


கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? – அட,
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? – அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே.

என்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ -
தன்னை வென்றால் அவை யாவும் பெறுவது
சத்தியமாகும் என்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றும் உணர்ந்த பின்னும்
தன்னை வென்றாலும் திறமை பெறாது இங்குத்
தாழ்வுற்று நிற்போமோ?

இவ்வுலகம் இனியது;
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;
தீ இனிது;
நீர் இனிது;
நிலம் இனிது;
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று;
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
மழை இனிது;
மலை இனிது;
காடு இனிது;
ஆறுகள் இனியன;
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன;
பறவைகள் இனியன;
ஊர்வனவும் நல்லன;
விலங்குகளெல்லாம் இனியவை;
நீர் வாழ்வனவும் நல்லன;
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.


பாரதி கவிதை: ‘வரம் கேட்டலிலிருந்துஒரு பகுதி

தேடிச் சோறு நிதம் தின்றுபல
சின்னஞ் சிறுகதைகள் பேசிமனம்
வாடித் துன்பமிக உழன்றுபிறர்
வாடப் பலசெயல்கள் செய்துநரை
கூடிக் கிழப்பருவ மெய்திகொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும்பல
வேடிக்கை மனிதரைப் போலேநான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமைதஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு.

விசையுறு பந்தினைப்போல்உள்ளம்
வேண்டியபடி செலும் உடல்கேட்டேன்;
நசையறு மனம் கேட்டேன்நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்;
தசையினைத் தீ சுடினும்சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்;
அசைவறு மதி கேட்டேன்இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
(பாரதியின்நல்லதோர் வீணையிலிருந்துஒரு பகுதி).

மஹாசக்திக்கு விண்ணப்பம்
 
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

பராசக்தி

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்

நானிலத்தவர் மேனிலை எய்தவும்

பாட்டிலே தனியின்பத்தை நாட்டவும்

பண்ணிலே களிகூட்டவும் வேண்டி நான்

மூட்டும் அன்புக் கனலோடு வாணியை

முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்

காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்

கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்

வானிருண்டு கரும்புயல் கூடியே

இழையும் மின்னல் சரேலென்று பாயவும்

ஈர வாடை இரைந்தொலி செய்யவும்

உழைஎலாம் இடையின்றி இவ்வான நீர்

ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்

மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்!

வாழ்க தாய்!” என்று பாடும் என் வாணியே.
சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்

சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்;

அல்லினுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்

அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,

கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்,

புல்லினில் வயிரப்படை தோன்றுங்கால்,

பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!பாரதியின்பராசக்தியிலிருந்துஒரு பகுதி.

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!